Vaithikasri (Regd) New No.488, old 175, T.T.K. Road, Alwarpet, Chennai-Pin 600018 
Phone 24361210-

 www.vaithikasri.com Vaithikasri@yahoo.com

 

News

Email : vedicgurukulam@gmail.com

SANDHYA VANDANA COMPETITION-2016

 

.Participants are instructed to be present at the venue at the report time (25-12-2016 sharp 01.00 p.m)

Venue address: Asthika samajam, 2nd street Venus colony, Alwarpet,Chennai 600018

 Participants have to make their own arragmments for travel.

Snacks Tea and coffe milk will be offered by us to the Participants and perants

 All contestants will be given participation certificates. Prize winners will be awarded during the function.

Participants should come in Traditional Dress only 

The Judges decision will be final. 

 

வைதிகஸ்ரீ புது எண் 488 டி.டி.கே ரோட்
ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 044-24361210 -9381061946

வைதிகஸ்ரீ ஸந்தியாவந்தனப் போட்டி_2016  25-12-2016 Sundayவிதிமுறைகள்


ஸந்த்யாவந்தனப்போட்டியில் ஏழு முதல் 18 வயது வரையுள்ள(உபநயமான) அனைவரும் கலந்துகொள்ளலாம், இதில் கலந்துகொள்ள (காலை ஆஹாரம் உள்பட) யாரிடமும் எந்த ஒரு கட்டணமும் வஸூலிக்கப்பட மாட்டாது,

 
போட்டியில்கலந்து கொள்ளும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 18-12-16 ஞாயிறு மாலை8.00மணிக்குள் வைதிகஸ்ரீ அலுவலகத்தில் வைதிகஸ்ரீயைச்சேர்ந்தவர்களிடம் வழங்க வேண்டும.

 
விண்ணப்பம் அளித்துள்ள மாணவர்கள் 25-12-16 ஞாயிறு அன்று மதியம் ஸுமார் 01.00 முதல் 02.00 மணிக்குள் சென்னை18 ஆழ்வார்பேட்டை வீணஸ் காலனி 2ஆவது தெரு ஸ்ரீ ஆஸ்திக ஸமாஜத்துக்கு (வேஷ்டி கட்டிக்கொண்டு) தேர்வெழுத பேனா மட்டும் எடுத்துக் கொண்டு வரவேண்டும, பரீக்ஷைக்கு வரும் மாணவர்களுக்கு வைதிகஸ்ரீ சார்பாக டீ காபி பால் இலவஸமாக  வழங்கப்படும்,.

 
ஸந்தியாவந்தன மந்திரங்களில் (மனப்பாடம்) ஐந்து கேள்விகளும் ஸந்தியாவந்தன விதிமுறைகள் மற்றும் விளக்கங்களில் மூன்று  கேள்விகள் என ஓவ்வொருவருக்கும் மொத்தம் எட்டு கேள்விகள் கேட்கப்படும், ஒவ்வொரு கேள்விக்கும் பத்து மார்க் என மொத்தம் 80 மார்க் மற்றும் மந்திர (எழுத்து) உச்சாடனம் (ஸ்பஷ்டம்), ஸ்வரம், ஆகியவற்றிற்கு இருபது மார்க் ஆக மொத்தம் 100 மார்க் கணக்கிடப்படும்.
 

எழுத்துத் தேர்வில் இருபது கேள்விகள் (தலா ஐந்து மார்க்) ஆப்ஷன் (பல பதில்களில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும்) முறையில் அமைந் திருக்கும். (10 வயதிற்குட்பட்ட மாணவருக்கு மட்டும் எழுத்து பரீக்ஷையில் உதவி செய்ய தாய் அல்லது தந்தை அனுமதிக்கப்படுவார்கள்)

 
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் அதிக மார்க் வரிசையில் 1) விஸிஷ்ட ஸ்ரேணீ (விசேஷத் தேர்ச்சி) ஓருவர் , ப்ரதம ஸ்ரேணீ (முதல் க்ளாஸ்) ஓருவர், த்விதீய ஸ்ரேணீ (இரண்டாம் க்ளாஸ்) மூன்று பேர், த்ருதீய ஸ்ரேணீ (மூன்றாம் க்ளாஸ்) ஆறு நபர், ஆஸ்வாஸன ஸ்ரேணீ (ஆறுதல் க்ளாஸ்) பத்து பேர் என்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஸர்டிபிகேட்டும் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும்.
 

போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அன்று மாலை ஸுமார் 6.00 மணிக்கு ஸ்ரீ குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் ஸர்டிபிகேட்டும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்

2016 Copyright vaithikasri. All rights reserved.

Back