New Page 1

 

VEDA SREE F A Q

வேத ஸ்ரீ வகுப்பு என்றால் என்ன??

 வேத பாடசாலையில் சேர்ந்து முழு நேரமாக வேதம் முழுவதும் கற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காக,  குறிப்பாக பள்ளிக் கூடம் செல்லும் சிறுவர்கள் அல்லது அலுவலகம் செல்லும் க்ருஹஸ்தர்கள் ஆகியோருக்காக பகுதி நேரமாக வேதத்தை அக்ஷர சுத்தத்துடனும் ஸ்வர சுத்தத்துடனும் முறையாகக் கற்றுத்தருவதே வேதஸ்ரீ வகுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதஸ்ரீயின் நோக்கங்கள் -எதற்காக வேத ஸ்ரீ் வகுப்புகள்?

 • பலரும் வேத(மந்திர)த்தைச் சொல்லி அதன் மூலம் வேதமும் வேத சப்தமும் பற்பல இடங்களிலும் பரவச்செய்து அதன் மூலம் தேச க்ஷேமம் மற்றும் மக்களிடம் நல்ல எண்ணங்கள் ஸத்வகுணம் நல்லொழுக்கம் ஏற்படச் செய்ய வேண்டும்.

 • வேத மந்திரத்தை குருமுகமாக ஸரிவர கற்றுக் கொள்ளாததால் அதற்கான ஸ்வரம் அக்ஷரம் மாறுதலாகச் சொல்லிச் செய்யப்படும் நித்ய கர்மாவால் ஏற்படும் விபரீத(எதிரிடையான) பலனைத் தடுக்க வேண்டும்.

 • ப்ராஹ்மணர்கள் தினஸரி செய்யும் ஸந்த்யாவந்தனம் ப்ருஹ்ம யக்ஞம் போன்ற நித்ய கர்மா மற்றும் அமாவாஸை போன்ற நாட்களில் செய்யும் பித்ரு தர்ப்பணம் போன்றவற்றில் சொல்லபப்டும் வேதமந்திரத்தை ஸரியான ஸ்வர சுத்தத்துடன் சொல்லி முழு பயனை அடையச் செய்ய வேண்டும்,

 • பூணல் போட்டுக் கொண்ட நாம் வேதத்தை முழுவதும் அத்யயனம் செய்யாவிட்டாலும் 
  சிறிதாவது வேதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பலரது தார்மிகமான ஆசையை நிறைவேற்றுதல்

வேதஸ்ரீ் வகுப்புகளுக்கு சேர்க்கை-மற்றும் கட்டணங்கள் ADMISSION- Fesses Details

 • ஸ்ரீ ஸீதாராம குருகுலம் சார்பாக நடத்தப்படும் முழு நேர வேத பாடசாலையைப்போலவே பகுதி நேர வேத ஸ்ரீ வகுப்புகளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும், சேர்க்கைக்கோ வகுப்புக்கோ கட்டணம் எதுவும் கிடையாது,

 •  ச்ரத்தையுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வதும், கற்ற வேதத்தை முறையாகப் பயன்படுத்துவதுமே எங்களுக்குத்தரும் கட்டணமாக-கௌரவமாக- க்கருதப்படும்.

 • No Any Admission Free and classes Fee This si the Free Vedic Part Time Classes

வேதஸ்ரீ வகுப்புகள் யார் யாருக்கு?

 • வேதஸ்ரீ வகுப்புகள் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நடத்தப்படும்,

 • வேதஸ்ரீ  வகுப்பில் கலந்து கொள்பவர்கள் உபநயன ஸம்ஸ்காரம் செய்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்,

 • வேதத்திலும் ஸனாதன ஹிந்து தர்மத்திலும் குறிப்பாக வேதம் சொல்லித்தரும் ஆசிரியரிடத்திலும் ச்ரத்தை (நம்பிக்கை)  மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

 • வகுப்புகள் நடைபெறும் ஸமயத்தில் மேல்சட்டை- பனியன் -பேண்ட்- ஆகியவற்றை விலக்கி- வேஷ்டி துண்டு (திருமணமானவர்கள் பஞ்ச கச்சம்) ஆகியவற்றுடன் இருபபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 • நிர்வாகிகளால் சூழ்நிலையைக் கருதி அவ்வப்போது கூறப்படும் சிற்சில நியமங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுபவராக இருத்தல் வேண்டும்.

வேதஸ்ரீ வகுப்புகள் எவ்வாறு நடத்தப்படும்?

வேதஸ்ரீ் வகுப்புகள் முறையாக குரு மூலமாக (வேதபாடசாலை) மூலமாக வேதம் முழுவதும் படித்து ஸ்நானம் ஸந்த்யாவ்ந்தனம் குடுமி (பஞ்சகச்சம்) போன்ற அடிப்படை ஆசாரமுள்ள  வைதிகர்கள் (வித்வான்கள்)  மூலம் கற்றுத்தரப்படும்.

வேதஸ்ரீ வகுப்புகளில் என்னென்ன (வேத பாகங்கள்) கற்றுத்தரப்படும்?

 • வேத ஸ்ரீ வகுப்புகள் ப்ராஹ்மணராகப் பிறந்தவர் ஒவ்வொரு நாளும் கட்டாயம் செய்ய வேண்டிய நித்ய நைமித்திக கர்மாக்களுக்கு (அனுஷ்டானத்துக்கு)த் தேவையான மந்திரங்கள் அதற்கான வரிசையில் கற்றுத்தரப்படும், தற்சமயம் அவை ஐந்து பாகங்களாகப் பிரிகக்ப்பட்டு பாடங்கள் திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன,  இவற்றில் தேவைக்குத்தக்கவாறு மாறுதல் செய்யப்படும்,  ஒவ்வொரு பாகத்திலும் சுமார் 24 வகுப்புகள் நடத்தப்படும். பாகங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

ந்த எந்த நாட்களில் வகுப்புகள்?

 • கூடியவரை வகுப்புகள் வாரம் மூன்று நாட்களாகவும் (weekly thrice) , வாரம் ஒருமுறை (Weekly once)  வகுப்பாகவும் காலை மாலை வேளைகளில் அட்டவணையில் குறிப்பிட்டபடி நடைபெறும்,

 • வேதம்கற்றுக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட பிரதமை அஷ்டமீ சதுர்தசீ பௌர்ணமீ அமாவாஸை ஆகிய நாட்களில் வகுப்புகள் நடத்தப்படாது (புதிய பாடங்கள் சொல்லித்தர மாட்டாது),

 • ஆனால் அஷ்டமீ சதுர்தசீ நாட்களில் மட்டும் முன்பி கற்றுக் கொண்ட (வேத)பாடத்தை திரும்பச் சொல்லிப் பழகிக் கொள்ளலாம்).

Back

2017 Copyright Seetharama Gurukulam. All rights reserved.
Back